செம்பரம்பாக்கம்: காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி தெளிப்புபணி தீவிரம்!

செம்பரம்பாக்கம்: காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி தெளிப்புபணி தீவிரம்!
X
வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்ட காட்சி.
செம்பரம்பாக்கம் ஊராட்சியில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டப்படுத்த முழு ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று காய்சல் பரிசோதனை செய்வதோடு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர் . இதனை தொடர்ந்து வீதி வீதியாக டேங்கர், டிராக்டர் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்