சுயதொழில் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

தமிழ் சேவா சங்கத்தின் சார்பில் சுயதொழில் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ் சேவா சங்கத்தின் சார்பில் சுயதொழில் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, வெங்கல் கிராமத்தில் நடைபெற்றது.
தமிழ் சேவா சங்கத்தின் சார்பில் 120 பெண்களுக்கு தையல் பயிற்சி, ஆரி வேலைப்பாடு,சோப்பு தயாரித்தல், சித்த மருத்துவ பயிற்சி உள்ளிட்ட சுயதொழில் மேற்கொள்ளுவதற்கான 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
இவ்வாறு பயிற்சி முடித்த பெண்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம்,வெங்கல் ஊராட்சியில் உள்ள சிவலோக தியான வனம் கமலநிவாஸ் கோசாலா வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,தமிழ் சேவா சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் இரா.ஆதவன் தலைமை தாங்கினார். சித்த வைத்தியர் சீனிவாசன், வழக்கறிஞர் மணிசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் சேவா சங்கத்தின் நிறுவன தலைவர் சு.பா.ஞானசரவணவேல், வாதூர் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு சுயதொழில் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றி பேசினர்.
இதன் பின்னர், சிவலோக தியான வனம் கமலநிவாஸ் கோசாலா வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.மதியம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயிற்சி முடித்த பெண்கள் உள்பட சுமார் 500 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை மண்டல அமைப்பாளர் அட்சயலட்சுமி,சென்னை மண்டல மகளிர் அணி அமைப்பாளர் விஜயலட்சுமி,திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் தனலட்சுமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல அமைப்பாளர் வினோத் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu