பறிமுதல் வாகனங்களை முறையாக ஏலம் விட சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கோரிக்கை

பறிமுதல் வாகனங்களை முறையாக ஏலம் விட சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கோரிக்கை
X

காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்.

பறிமுதல் வாகனங்களை முறையாக ஏலம் விட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த வெங்கல் காவல் காவல்துறையினரால் பல்வேறு குற்ற சம்பவங்களில் பிடிபட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் காவல் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் காவல்நிலையம் சுற்றி ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் மழையில் நினைந்து துருப்பிடித்து வீணாக போகிறது. மேலும் அதில் செடி கொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகளுக்கு இருப்பிடமாக மாறி வருகிறது.

மேலும் அருகில் காவல் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் செல்லும் அபாயம் உள்ளது. எனவே இந்த வாகனங்களை முறையாக ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!