வெங்கல் பள்ளியில் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை:எம்.எல்.ஏ. பங்கேற்று துவக்கம்

பள்ளி புதிய கட்டிட கட்டுமானப்பணிக்கான பூமிபூஜையில் எம்எல்ஏ கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
School Building Construction Boomi Pooja
பெரியபாளையம் அருகே எல்லாபுரம் மத்திய ஒன்றியம் வெங்கல் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளியின் வளாகத்தில் ₹ 3.25 கோடியில் நபார்டு திட்டத்தின் மூலம் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவும் , பின்னர் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டெல்லா கிரிஷ்டி பாய் தலைமை தாங்கினார்.
எல்லாபுரம் மத்திய திமுக ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி , மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் , முன்னாள் பொறுப்புகுழு உறுப்பினர் குமார், அவைத்தலைவர் முனுசாமி ,பாஸ்கர், சுப்பிரமணி, சீனு, ஒன்றிய கவுன்சிலர் திருமலை சிவசங்கர், ஊராட்சி செயலாளர் நாகலிங்கம் , டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
School Building Construction Boomi Pooja
வெங்கல் பள்ளியில் பள்ளி கட்டிடம் அடிக்கல் மற்றும் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ கிருஷ்ணசாமி வழங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திராணி லிங்கன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு புதிய பள்ளிக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி , 154 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி பேசும்போது, இப்பள்ளிக்கு கடந்த வருடம் நான் வந்த போது கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
அதை தற்போது நிறைவேற்றியுள்ளேன் மேலும் இப்பள்ளிக்கு கலையரங்கம் மற்றும் விளையாட்டு மைதானம் கேட்டுள்ளனர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு எம்எல்ஏ தொகுதி நிதியில் கலையரங்கம் கட்டித்தரப்படும் , மேலும் விளையாட்டு மைதானம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கோடுவெளி துணைத்தலைவர் சரத், கிளைசெயலாளர்கள் மேகவண்ணன், ஜெகன், சுரேஷ், பொன்முத்துகுமார், சேட்டு, ரகு, ஸ்ரீதர், கற்பி அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுப்பனித்துறை செயற்பொறியாளர் விஜயானந்த் , செம்பேடு சுப்பிரமணி , தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இறுதியில் முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலை நன்றி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu