பூந்தமல்லியில் சாலை விபத்து மெக்கானிக் பலி

பூந்தமல்லியில் சாலை விபத்து மெக்கானிக் பலி
X
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மொக்கினிக்கின் டூவிலர் செண்டர் மீடியனில் மோதிய விபத்தில், மெக்கானிக் பரிதபமாக உயிரிழந்தார்.

போரூர் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜித் வயது (21) இருசக்கரவாகன மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு பழுது பார்த்த வாகனத்தை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓட்டி பார்க்க எடுத்துச் சென்றார்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!