சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்
சுகாதாரக்கேடு உருவாகும் வகையில் பூந்தமல்லி அருகே சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவு, குப்பைகள்
பூந்தமல்லி அருகே சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவு, குப்பைகளால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர் பகுதியில் சுமார் 3000.க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சக்தி நகர் செல்லக் கூடிய பிரதான சாலையை ஆக்கிரமிப்பு செய்து சென்னீர்குப்பம் ஊராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி ஊழியர்களே சாலையோரங்களில் கொட்டி செல்வதால். இதனால் சாலை முழுவதிலுமே குப்பைகள் குவிந்து சாலையை இல்லாதது போல் காட்சியளிக்கிறது.
எனவே இப்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் அவ்வழியாக தினசரி அத்தியாவசிய தேவைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு கூட செல்லக்கூடிய முடியாமல் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்லும் சூழ்நிலைக்கு அப்பகுதி பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஊராட்சி நிர்வாகம் மட்டுமின்றி சமூக விரோதிகள் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் மருத்துவ கழிவுகள் இறைச்சிக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். அதிக அளவில் குப்பைகள் டன் கணக்கில் குவிந்துள்ளதால் இதனை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தீயிட்டு கொளுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்படுவதோடு குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே இதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் மெத்தன போக்கை கைவிட்டு இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிருவாகம் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu