அகற்றப்பட்ட கடைகளை மீண்டும் அமைத்து தர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
கோப்பு படம்
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் அகற்றப்பட்ட பழ கடைகளை மீண்டும் அமைத்து தர வேண்டுமென வியாபாரிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இடத்தில் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த பழ வியாபாரிகள் மெட்ரோ பனி காரணம் காட்டி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாபாரம் நடத்தி பிழைப்பு நடத்தி வந்த தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்து உள்ளதால் மீண்டும் அதே பகுதியில் பழ வியாபாரம் செய்து கொள்ள நகராட்சி நிர்வாகம் அனுமதிதர வேண்டும் எனக் கூறி முப்பதுக்கு மேற்பட்ட வியாபாரிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் தெரிவிக்கையில்.
பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் சுமார் மூன்று தலைமுறையாக 30 மேற்பட்டோர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு மூன்று பைசா முதல் 40 ரூபாய் வரை வரி செலுத்தி கடை நடத்தி வந்ததாகவும். இந்த வியாபாரத்தை நம்பி தாங்கள் குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும்,நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றிகாவல்துறைகளை வைத்து அதிரடியாக கடைகளை அகற்றியதாகவும் .
30 லட்சம் மதிப்பீட்டின் பேருந்து நிலையம் அருகே 30 கடைகளை கட்டி கொடுப்பதாக பூந்தமல்லி நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர் உறுதி அளித்ததாகவும்,
இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி அன்று நகராட்சி நிர்வாகம் அதிரடியாக காவல்துறை துணைவுடன் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள 30 பழக்கடைகளை காலி செய்து அகற்றியதாகவும்,
வியாபாரிகள் ஒரு நாள் அவகாசம் கேட்டு நகராட்சி நிர்வாகம் அதற்கு செவி சாய்க்காமல் போனதால் பல ஆயிரம் மதிப்பிலான பழங்கள் நஷ்டமானதாகவும், பழ வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வந்த தங்கள் தற்போது கடை இல்லாமல் தங்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,
மீண்டும் அதே இடத்தில் பழ வியாபாரம் செய்ய மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்திட வேண்டுமெனக் கோரி முப்பதுக்கும் மேற்பட்ட பழ வியாபாரிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu