திருவெங்கடம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக ரயில்வே தடுப்பு சுவர்

திருவெங்கடம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக ரயில்வே தடுப்பு சுவர்
X

ரயில்வே தடுப்பு சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடிய மக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

திருவெங்கடம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ரயில்வே தடுப்பு சுவர் அமைத்தது. அதனை பா.ஜ.க. நிர்வாகி தடுத்து நிறுத்தினார்.

திருநின்றவூர் திருவெங்கடம் நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் இடையூறு ஏற்படும் வகையில் ரயில்வே சுற்றுச் சுவரை அமைத்து வருகிறது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சற்று தள்ளி அமைக்க கோரி அதிகாரிகளுடன் திருநின்றவூர் பொதுமக்கள் மற்றும் பாஜகவின் மண்டல தலைவர் தினேஷ் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் எந்த பலனும் அளிக்காததால், திருநின்றவூர் பாஜகவினர் இந்திய ரயில்வே பயணியர் வசதிகள் மேம்பாடு குழு உறுப்பினர் எம்.கே. ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு பொது மக்களின் கோரிக்கையை கூறினார்.

அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணிகளை நிறுத்தியதுடன் மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!