புற்று நாகவல்லியம்மன் ஆலய தீமிதி திருவிழா

புற்று நாகவல்லியம்மன் ஆலய தீமிதி திருவிழா

தீமிதி திருவிழாவில் விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து அம்மனை தரிசனம் செய்தனர்.

சிங்கிலி குப்பம் கிராமத்தில் புற்று ஸ்ரீ நாகவல்லியம்மன் ஆலய 6-ஆண்டு தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து அம்மனை தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அடுத்த ஆயலசேரி ஊராட்சிக்குட்பட்ட சிங்கிலி குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புற்று நாகவல்லி யம்மன் ஆலய 6-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி ஸ்ரீ கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தல், 19ஆம் தேதி ஸ்ரீ கணபதி ஹோமம் உடன் ஆலய வளாகத்தில் கொடி ஏற்றுதல் உடன் பால்குடம் எடுத்தல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இருபதாம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமுடன் அம்மன் பூ கரகம் திருவீதி உலா வருதல், அன்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கிலி குப்பம் கங்கை அம்மன் ஆலயத்திலிருந்து அம்மன் பூ கரகம் அலங்கரித்து ஊர்வலமாக வந்து புற்று நாகவல்லியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது பின் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அழகு பானை எடுத்தல், உடன் யாகம் தீ மூட்டுதல் உள்ளிட்டவை நடந்த பின்னர் மாலை ஊர் எல்லையில் காப்பு கட்டி விரதம் இருந்த 75 மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உடல் முழுவதும் சந்தனம், பூக்களாலும் அலங்காரம் செய்து காத்திருந்தனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி தீ மிதித்து அம்மனை தரிசித்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்களும் மற்றும் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடு வெளி தங்கம் முரளி, ஒன்றிய குழு உறுப்பினர் தனலட்சுமி முனுசாமி, மற்றும் சு,ரகு, வி. சீனிவாசன்,எஸ்.ரகு உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆலயத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story