உலக குடும்ப பொருளாதார தினம்: பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

உலக குடும்ப பொருளாதார தினம்: பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
X

உலக குடும்ப பொருளாதார தினத்தை முன்னிட்டு கோடுவெளி ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளி ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

உலக குடும்ப பொருளாதார தினத்தை முன்னிட்டு கோடுவெளி ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கோடுவெளி ஊராட்சியில் உலக குடும்ப பொருளாதார தின நிகழ்ச்சி நடைபெற்றது.இதை முன்னிட்டு மகளிர் மற்றும் மகளிர் குழுக்களுக்கு இடையே பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது.இதில்,வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி படவேட்டம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு,சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.கருணாகரன் தலைமை வகித்தார். கோடுவெளி உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வரும், திட்ட இயக்குனருமான முனைவர் வே.அப்பாராவ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கோடுவெளி ஊராட்சி மன்ற தலைவர் சித்ராகுமார் கலந்து கொண்டார்.பெண்களுக்கிடையே பல்வேறு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சரத்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் உதவி பேராசிரியர் டாக்டர் சித்ராம்பிகை வரவேற்றார். முடிவில்,உதவி பேராசிரியர் முனைவர் ஜி.சுஜாதா நன்றி கூறினார்.


Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி