பூவிருந்தவல்லியில் முதியவர் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக நிர்வாகிகள்!

பூவிருந்தவல்லியில் முதியவர் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக நிர்வாகிகள்!
X
பூவிருந்தவல்லியில் முதியவரின் உடலை தமுமுக நிர்வாகிகள் நல்லடக்கம் செய்யும் புனித பணியை மேற்கொண்டு பிரம்மிப்பில் ஆழ்த்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்த பொன் பரமானந்தா (78). இவர் இறந்து விட்டதையடுத்து உடலை நல்லடக்கம் செய்ய உதவிடுமாறு பூவிருந்தவல்லி முன்னாள் நகரமன்ற உறுப்பினர் நெல்சன் தமுமுக மாவட்ட தலைவர் டி.எம்.எம். ஷேக் தாவூத்திடம் கேட்டுக் கொண்டார்.

அதன்பேரில் நகரத்தலைவர் காஜா மைதீன் தலைமையில், பூவிருந்தவல்லி துணைச் செயலாளர் ஹாஜா, 16வது வார்டு தலைவர் தமீமுன் அன்சாரி, 16வது வார்டு துணைத் தலைவர் ஹமீத் நிஜாமுதீன், 16வது வார்டு துணை செயலாளர் சாகுல் ஆகியோர்களின் உதவியோடு சி.எஸ்.ஐ கல்லறையில் நல்லடக்கம் செய்யும் புனிதப் பணியினை பூவிருந்தவல்லி தமுமுக தன்னார்வலர்கள் மேற்கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!