பூவிருந்தவல்லி பள்ளியில் செஸ் போட்டி: எம்எல்ஏ கிருஷ்ணசாமி தொடக்கம்

பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் இயங்கி வரும் செயிண்ட் ஜோசப் பள்ளியில் செஸ் பிளாஸ்டர் என்ற தலைப்பில் மாபெரும் செஸ் போட்டி நடைபெற்றது.
அருட்சகோதரி ஞானசெல்வம் மற்றும் ஜெகனி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் ஒரே நேரத்தில் சுமார் 2000 பேர் போட்டியில் பங்கேற்று விளையாடினர்.
குறிப்பாக 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் ஆர்வமூடன் சதுரங்க போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.. இந்த நிகழ்வானது ராபா கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை பதக்கங்களும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
:இந்த நிகழ்ச்சியில் பூவை நகர செயலாளர், ஜி.ஆர்.திருமலை, நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் ஸ்ரீதர், பள்ளி முதல்வர் ராபர்ட் ராஜன், காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன் கவுன்சிலர்கள் நகரக் கழக நிர்வாகிகள் சு.அன்பழகன், இ.பழனி, அப்பர் ஸ்டாலின், டில்லிராணிமலர்மன்னன் சௌந்தரராஜன் , புண்ணியகோட்டி சுதாகர், ஜனார்த்தனன் , அசோக்குமார், நிர்மல்ராஜ், ஜெ.அமிதாப், கோர்ட் சேகர், நகர்மன்ற உறுப்பினர்கள் கன்னிமரியால் வின்பிராட் நீலாவதி ஐயப்பன், தாமரைக்கண்ணன், மீனாட்சி ஜெய்சங்கர், பாத்திமா ஆருண், செந்தாமரை நெல்சன், ஷேக், தங்கம்திருமலை , ராஜ்குமார் , தீபா யுவராஜ், கவிதா சுரேஷ், நிர்வாகிகள் தாஜூதீன், துரை பாஸ்கர், ப.அன்பழகன், சுகுமார், ஷாஜகான், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu