பெரியபாளையம் அருகே தார் சாலை பணியை தொடங்கி வைத்த பூந்தமல்லி எம்.எல்.ஏ.

பெரியபாளையம் அருகே தார் சாலை பணியை தொடங்கி வைத்த பூந்தமல்லி எம்.எல்.ஏ.
X

பெரியபாளையம் அருகே தார் சாலை அமைக்கும் பணியை கிருஷ்ணசுவாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

பெரியபாளையம் அருகே தார் சாலை அமைக்கும் பணியை பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ணசுவாமிதொடங்கி வைத்தார்.

பெரியபாளையம் அருகே ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி குருவாயூர் முதல் பாஷிகாபுரம் வரை ரூபாய் இரண்டு புள்ளி 66 கோடி செலவில் இணைப்பு தார் சாலை அமைக்கும் பணியை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட குருவாயல் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக புதிதாக குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டித்தர அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக சட்டமன்ற உறுப்பினர் ஆர் கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்று ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 36 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி கட்ட முடிவு செய்து கட்டி முடித்தனர். இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசுவாமி கலந்து கொண்டு குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் குருவாயூர் முதல் பாஷிகாபுரம் வரை ரூபாய் 2.66 கோடி செலவில் கிராமங்களை இணைக்கும் வகையில் இணைப்பு தார் சாலை அமைக்கும் பணியினை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் கோடு வெளி தங்கம் முரளி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட் அம்மாள், துணைத் தலைவர் சண்முகம், மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பி.ஜி. முனுசாமி, லோகநாதன், எம்.குமார், நாராயணசாமி சுப்பிரமணி, ரகு, கணேசன், சுப்பிரமணி, சேகர், ஜெகநாதன், ராஜேஷ், சரத்குமார், சுரேஷ், செம்பேடு செல்வம், நாராயணசாமி, மாரி, அச்சுதன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். தாங்கள் பகுதிக்கு குடிநீர் தொட்டி அமைத்து தந்த சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி பகுதி மக்கள் சால்வனை வைத்து தாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture