பூந்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூந்தமல்லி எம்.எல்.ஏ இடம் தேர்வு

பூந்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூந்தமல்லி எம்.எல்.ஏ இடம் தேர்வு
X

 ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள பேருந்து நிறுத்த இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி

பூந்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிறுத்தம் போன்றவை அமைப்பதற்கான இடங்களை எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி தேர்வு செய்தார்.

பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், தாமரைப்பாக்கம் பகுதியில் பஸ் நிறுத்தம் அமைய உள்ள இடத்தை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி தேர்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கல் கிராமத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தொகுதி மேம்பாட்டு நிதி ₹ 60 லட்ச மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைவதற்கான இடத்தை ஆ.கிருஷ்ணசாமி நேரில் சென்று பார்வையிட்டு தேர்வு செய்தார்.

பின்னர் தாமரைப்பாக்கம் கூட்டு சாலை அமணம்பாக்கம் பகுதியில் அமைய உள்ள போக்குவரத்து பணிமனை இடத்தையும் ஆய்வு செய்தார். மேலும் தாமரைப்பாக்கம் நான்கு முனை சந்திப்பில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி தொகுதி நிதி ₹ 20 லட்சம் செலவில் அமைக்க உள்ள பேருந்து நிறுத்தம் இடத்தையும் பார்வையிட்டார்.

அப்போது அவருடன் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர். இதில் திமுக எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் கொடுவேளி தங்கம் முரளி, அவைத்தலைவர் வெங்கல் பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி டி. தாமரைப்பாக்கம் பாஸ்கர், ஊராட்சி செயலாளர் நாகலிங்கம் , சீனிவாசன், ஸ்ரீதர், கிராணசுந்தரம், ரஜினி, சேர்த்து பாக்கம ஸ்ரீதர், இளவழகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!