பூந்தமல்லி: விதிமுறைகளை மீறும் கடைளுக்கு சீல்: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

பூந்தமல்லி நகராட்சியில் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

இன்று முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள நிலையில் மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசிய கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சி வியாபாரிகளுடன், அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக கடை வாசலில் பொதுமக்கள் நிற்க வட்டமிடுதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி வழங்குதல், குளிர் சாதன பெட்டி இயக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல் அரசு அறிவித்த கடைகள் தவிர்த்து சலூன், ஜவுளி உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி இல்லை. மேலும் உரிய பாதுகாப்புடன் கடைகளை செயல்படுத்த வேண்டுமென நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைக்கு அபராதம் விதிப்பதோடு தொடர்ந்து அதே போன்று செயலில் ஈடுபட்டால் கடையை மூடி சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!