பூந்தமல்லி: மைதானத்தில் விளையாடிய வாலிபர்கள்- போலீசாரை கண்டதும் ஓட்டம்!

பூந்தமல்லி: மைதானத்தில் விளையாடிய வாலிபர்கள்- போலீசாரை கண்டதும்  ஓட்டம்!
X
ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய வாலிபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பிய காட்சி.
பூந்தமல்லியில் ஊரடங்கை மீறி மைதானத்தில் விளையாடிய வாலிபர்கள்; போலீசாரை கண்டதும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பூந்தமல்லி, லட்சுமி நகர் பகுதியில் வாலிபர்கள் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாடுவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

போலீசார் வருவதை பார்த்த வாலிபர்கள் தாங்கள் விளையாடிக்கொண்டிருந்த பேட், ஸ்டம்ப், பால் உள்ளிட்டவற்றை அப்படியே போட்டு விட்டு போலீசாரிடம் சிக்காமல் இருக்க தலைதெறிக்க ஓடினார்கள். இ

தையடுத்து அங்கு சிக்கிய சில வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் பேட், ஸ்டம்ப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். விதிமுறை மீறி விளையாட்டிற்காக கொண்டு வரப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!