பூந்தமல்லி பகுதிகளில் 100 நடமாடும் காய்கறி விற்பனை வாகனசேவை துவக்கம்!

பூந்தமல்லி பகுதிகளில் 100 நடமாடும் காய்கறி விற்பனை வாகனசேவை துவக்கம்!
X

பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் 100 நடமாடும் காய்கறி விற்பனை வாகன சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

பூந்தமல்லி பகுதிகளில் 100 நடமாடும் காய்கறி விற்பனை வாகன சேவையை நகராட்சி நிர்வாகம் தொடங்கி வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் காய்கறி, பழங்களை மக்கள் வசிக்கும் பகுதிக்கு வாகனங்களில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 28 பஞ்சாயத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் காய்கறி வாகனங்களை சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 77 வாகனம் மூலம் காய்கறிகள், 28 பஞ்சாயத்திற்கு உட்பட்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பூந்தமல்லி நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை வாகன சேவை துவக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!