/* */

பூந்தமல்லி: குப்பைகளை எரிக்கும் மேதாவிகள்! மூச்சுத்திணறலால் தவிக்கும் மக்கள்!!

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் சுவாச பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

HIGHLIGHTS

பூந்தமல்லி: குப்பைகளை எரிக்கும் மேதாவிகள்! மூச்சுத்திணறலால் தவிக்கும் மக்கள்!!
X

குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால் புகை மூட்டமாக உள்ளதை காணலாம்.

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மருத்துவ கழிவுகள் மற்றும் பல்வேறு குப்பைகளை மூட்டை மூட்டையாக கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அந்த குப்பைகளை சிலர் தீ வைத்து விட்டும் சென்று விடுகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கொரோனா 2ம் அலை காரணமாக ஏற்படும் சுவாச பிரச்சனைபோல் புதுவித சுவாச பிரச்சனை ஏற்படுமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதற்கு முன் இதனை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்ககளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 Jun 2021 12:54 PM GMT

Related News