பூந்தமல்லி: நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நிவாரண உதவி!

பூந்தமல்லி: நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு  நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நிவாரண உதவி!
X

நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நிவாரணப்பொருட்கள் வழங்கிய காட்சி.

பூந்தமல்லி நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு திரைப்பட நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நிவாரணப்பொருட்கள் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, அம்மா நகர் பகுதியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவும் வகையில் தென்னிந்திய திருக்கோவில் கூட்டமைப்பு சார்பாக 1 வாரத்திற்கு தேவையான 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்.

இதில் மாரி, சிங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்த பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சிறப்பு விருந்தினராக பங்கேற்று கூட்டமைப்பு சார்பாக நரிக்குறவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!