மத்திய அரசு நிவாரணம் வழங்காததால் பொங்கல் பணம் வழங்கவில்லை: எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி
திருமழிசை பேரூராட்சியில் மதசார்பு முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருமழிசை பேரூராட்சியில் மதசார்பு முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் தி.வே.முனுசாமி தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெ.மகாதேவன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் உ.வடிவேலு, ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பாதுகாப்பு முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார்.
அப்போது பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு சீரிய திட்டங்களை தீட்டி மக்கள் நலனுக்காக இரவு பகல் பாராமல் நிறைவேற்றி வருகிறது. கடந்த முறை கொரானா பேரிடர் காலத்தில் தமிழக அரசு நிவாரண தொகையாக குடும்பத்திற்கு ரூ. 4 ஆயிரம் வழங்கியது.
பொங்கல் பரிசு தொகுப்பாக மக்களுக்கு 21 பொருட்களை வழங்கியது. பெருமழை வெள்ள காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து காப்பாற்றியது. ஆனால் புயல், வெள்ள நிவாரண நிதியாக இந்தியாவை நசுக்கிக் கொண்டிருக்கும் மத்திய மோடி அரசு ஒரு ரூபாய் கூட பணம் ஒதுக்கீடு செய்யவில்லை. அந்தப் பணத்தை அவர்கள் உரிய நேரத்தில் வழங்கியிருந்தால் பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக பணமும் வழங்கியிருக்கும். ஆனால் இனி வரும் காலங்களில் மக்களுக்கு அதுபோல் பண்டிகை காலங்களில் பரிசு தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பா.ச.கமலேஷ், குமரேசன், பாரிவாக்கம் வே.தணிகாச்சலம், பேரூர் திமுக நிர்வாகிகள் வி.எம்.நாகதாஸ், மு.குமார், தி.கோ.செல்வம், பி.அருள், ஆர்.கருணாநிதி, மு.சுரேந்தர், கங்காதரன், எழிலரசன், இளங்கோவன், ஜான்மேத்யூ, நாகராஜ், சதீஷ், ஜெயகுரு, டி.கே.வேலு, மோகன், சீனிவாசன், வெங்கடேசன், முத்து, ஜெய், எட்டியப்பன், நவீன்குமார், வொண்ணில் குமார், தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu