பூந்தமல்லியில் சாய்ந்து கீழே விழும் நிலையில் தொலைபேசி இணைப்பு பெட்டி

பூந்தமல்லியில் சாய்ந்து கீழே விழும் நிலையில் தொலைபேசி இணைப்பு பெட்டி
X
சாய்ந்த நிலையில் உள்ள தொலைபேசி இணைப்பு பெட்டி.
பூந்தமல்லியில் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ள தொலைபேசி இணைப்பு பெட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பூந்தமல்லியில் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் இருக்கும் தொலைபேசி இணைப்பு பெட்டியை சம்பந்தப்பட்ட துறை கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பூந்தமல்லியில் இருந்து கிண்டி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சாலையின் இரு புறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது இந்த நிலையில் பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடி பஸ் நிறுத்தத்தில் ஆபத்தான முறையில் தொலைபேசி இணைப்பு பெட்டி கீழே விழும் நிலையில் உள்ளது

இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் ஏற்படும் நிலையும் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஏராளமான பயணிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து பயணம் செய்வது வழக்கம் அதேபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் இந்த பகுதியில் இருந்து அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

அவ்வாறு பயணம் செய்யும் பயணிகளுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் ஆபத்தான முறையில் தொலைபேசி இணைப்பு பெட்டி விழும் நிலையில் இருப்பதை அதிகாரிகள் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!