தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சாலையை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சாலையை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை
X
தாமரைப்பாக்கம் ஊராட்சி தமிழ் காலனியில் கழிவுநீர் செல்ல அமைக்கப்பட்ட கால்வாய் பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி, எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தமிழ் காலனி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த தமிழ் காலனி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் செல்ல சுமார் 200 மீட்டருக்கு கால்வாய் அமைக்கும் பணி 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு இதற்காக சாலை இடையே பள்ளம் தோண்டப்பட்டது.

கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கால்வாய் பணிகள் முழுமையாக முடிக்கப்படாத நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலையை தோண்டி கால்வாய் அமைத்ததால் அந்தப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளும் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும், வயதானவர்கள் அவ்வழியை பயன்படுத்த முடியாமல் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து சாலையை அமைக்க வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும், கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களிலும் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் தற்போது மழை காலம் என்பதால சாலை முழுவதும் மழை நீர் தேங்கி சேரும் சகதியாக மாறி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கண்டுகொண்டு மக்களின் நலனை கருதி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்