கல்லூரி மாணவி சாவிற்கு காரணமான சாமியாரை தூக்கில் போட பெற்றோர் கோரிக்கை
கல்லூரி மாணவி மற்றும் சாமியார்
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த செம்பேடு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவி அவருடைய தாய் மாமாவுக்கு உடல் நிலைசரியில்லாததால் அவருடைய பெற்றோர்களுடன் பூண்டி அடுத்த வெள்ளத்துக்கோட்டையில் உள்ள ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.
இந்நிலையில் அந்த ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் முனுசாமி மாணவியின் உள்ளங்கை ரேகையை பார்த்து உனக்கு நாகதோஷம் இருப்பதாக தெரிவித்து அவர் பெற்றோருக்கும் கூறி உள்ளார்.
அதனால் வாரத்திற்கு ஒருமுறை ஆசிரமத்திற்கு வந்து சென்றால் அதற்கான பரிகார பூஜைகள் செய்து நாக தோஷத்தை நீக்கப்படும் என சாமியார் முனுசாமி கூறியுள்ளார்.இதை நம்பி அவருடைய பெற்றோர்களும் கல்லூரி மாணவியை ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.கடந்த ஒரு ஆண்டுகளாக கல்லூரி மாணவி ஆசிரமத்திற்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி நாகதோஷம் தீர்ப்பதாக நள்ளிரவு பூஜைக்கு சாமியார் முனுசாமி கல்லூரி மாணவியை அழைத்துள்ளார்.அப்போது பிப்பிரவரி 14ஆம் தேதி மர்மமான முறையில் கல்லூரி மாணவி சாமியார் ஆசிரமத்தில் உள்ள வீட்டில் வாய் பகுதி முகம் பகுதியில் தலைப் பகுதியில் ரத்தம் சொட்ட சொட்ட மயக்க நிலையில் அடைந்து கிடந்தவரை அவருடைய பெரியம்மா கூச்சலிட்டு அழுது திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டுச் சென்று அனுமதித்தார். இருந்தார் . ஆனால் மாணவியோ சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 16ஆம் தேதி உயிரிழந்தார் .
இது தொடர்ந்து மாணவியின் தந்தை ராமகிருஷ்ணன் தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாமியார் மற்றும் மாணவியின் குடும்பத்துடன் விசாரணை மேற்கொண்டு வந்திருந்தனர்.
அத்தகைய விசாரணையில் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்றும் சந்தேகம் இருப்பதாகவும் சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் அளித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து மார்ச் 26ஆம் தேதி காவல் துறை தலைமை இயக்குனர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். திருவள்ளூர் பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து போலீசார் கடந்த மூன்று மாதங்களாக மாணவி பெற்றோர்கள் சாமியாரிடம் விசாரணை மேற்கொண்டு வந்திருந்தனர்
விசாரணை முடிவில் கல்லூரி மாணவிக்கு நாக தோஷம் இருப்பதாக சாமியார் முனுசாமி மாணவியின் பெற்றோர்களிடம் பொய் சொல்லி நள்ளிரவு பூஜைக்கு அடிக்கடி ஆசிரமத்திற்கு வர வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலை செய்து கொள்ள தூண்டியது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்ததால் சாமியார் முனுசாமியை குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மாணவியின் குடும்பத்தினர். தனது மகளுக்கு நாகதோஷம் எனக்கூறி எட்டு மாதங்களாக ஆசிரமத்திற்கு சாமியார் கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாலை நேரத்தில் அடிக்கடி ஆசிரமத்திற்கு சாமியார் அழைத்து கொண்டு வந்ததாகவும் தன் மகளுக்கு நாகதோஷம் நீங்க 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி சாமியாருக்கு செலவு செய்ததாகவும். நாகதோஷம் என பொய் சொல்லி தன் மகளை அடிக்கடி நள்ளிரவு பூஜைக்கு அழைத்து மயக்க ஊசி போட்டுசாமியார் முனுசாமி சித்திரவதை செய்துகொன்று விட்டதாகவும்.இந்த விவகாரத்திற்கு சாமியாருக்கு ஆதரவாக பென்னலூர்பேட்டைபோலீசாரும் உடந்தையாக இருந்து வந்ததாகவும்.அவர்கள் சாமியாரை ஒன்றும் செய்ய முடியாது உங்கள் மகளின் உடலை எடுத்துக்கொண்டு அவர் கொடுக்கும் பணத்தை வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்லுங்கள் என கூறியதாக மாணவியின் பெற்றோர் போலீசார் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
சாமியார் இதேபோன்று ஆந்திரா மற்றும் திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளத்துக்கோட்டை வெள்ளியூர் புன்னப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல பெண்களை நரபலி கொடுத்து சாகடித்து இருப்பதாகவும். யாரும் சொல்வதற்கு முன் வரவில்லை மாணவியின் பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தனது மகளுக்கு திருமணம் செய்ய தேதி பார்த்துவிட்டு வந்திருந்த நிலையில் மகளை சடலமாக பார்க்க வைத்த போலி சாமியார் முனுசாமியை தனது மகளுக்கு நடந்தது போல் யாருக்கும் நடக்காமல் இருக்க ஆசிரமத்திற்கு சீல் வைத்து சாமியார் முனுசாமியை வழக்கிலிருந்து தப்பிக்க விடாமல் ஜாமீன் கூட கிடைக்காமல் அவருக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் எனவும் அவருடைய பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தகைய போலி சாமியார் லீலைகளால் எத்தனை பெண்கள் பாதிப்படைந்து இருப்பதை அந்த ஆசிரமம் தொடங்கி நாள் முதல் என்ன நடந்தது முழுமையாக ஆய்வு செய்து விசாரித்து உண்மைகள் வெளியில் கொண்டுவர வேண்டும் எனவும் ஆசிரமத்தை சீல் வைத்து மூட வேண்டும் எனவும் ஏழைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தங்களுக்கு அரசு நிவாரணம் தொகை அளித்து குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க அரசு முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu