மதுரவாயில் அருகே பனை விதைகள் நடும் விழா

மதுரவாயில் அருகே பனை விதைகள் நடும் விழா
X
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ஏரியில் லயன்ஸ் கிளப் சார்பில் பனை விதைகளை கல்லூரி மாணவர்கள் நடவு செய்தனர்.

சென்னை மதுரவாயில் ஆலப்பாக்கம் ஏரியில், லைன்ஸ் கிளப் சார்பில் ம கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு 500 பனை விதைகள் நடவு செய்தனர்.

சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் ஏரிக்கரையில் 500 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பனைமர தொழிலாளர் நல வாரியம், கிரீன் ட்ரீம்ஸ் பவுண்டேஷன் மற்றும் ஆலப்பாக்கம் லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவி, மாணவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற லைன்ஸ் கிளப்பின் நிர்வாகி டில்லிபாபு கலந்துகொண்டு பனை விதைகளை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் கலந்துகொண்ட தனியார் கல்லூரி மாணவர்கள் ஏரியின் சுற்றி பல்வேறு இடங்களில் பண விதைகளை நடவு செய்தார்.

பின்னர் மண்வளம் காப்போம், மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் வரும் சந்தத்தினருக்கு இயற்கை வளங்களை பரிசாக அளிப்போம் போன்ற உறுதிமொழிகளை மாணவ,மாணவிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story