தீபாவளி சீட்டு நடத்தி ஏமாற்றிய வழக்கில் உரிமையாளரின் பொருட்கள் ஏலம்
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த மாலந்தூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஜே பி ஜோதி(36) இவர் வெங்கல் அடுத்த தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்தார் இவரிடம் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 4 கிராம் தங்கம் நான் என் மற்றும் 40 கிராம் வெள்ளி பட்டாசு இனிப்பு மல்லிகை பொருட்கள் வழங்குவதாகவும். அதேபோல் மாதம் 500 ரூபாய் செலுத்தினால் 2 கிராம் தங்கம் நான் நேற்றுடன் சமையல் எண்ணெய் மல்லிகை பொருட்களும் வழங்கப்படும் என்று அறிவித்து வெங்கல், தாமரைப்பாக்கம், அறிக்கப்பட்டு, குருவாயல், மாலந்தூர், பூச்சி அத்திப்பட்டு, பாகல்மேடு,செம்பேடு, கோடு வெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து சுமார் 3000க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் தீபாவளி பண்டு சீட்டுக்கு பணத்தை வசூல் செய்துள்ளார்.
இதனை அடுத்து தீபாவளி நெருங்கவும் தீபாவளி பண்டு சீட்டுக்கு பணம் கட்டியவர்களுக்கு பொருட்கள் வழங்கவில்லை என்றும் இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள தீபாவளி பண்டு நடத்திய ஜோதியிடம் சென்று கேட்டபோது பொருட்கள் இன்னும் வரவில்லை வெகுவிரைவில் வழங்கப்படும் என்று பொதுமக்களுக்கு தவணை கூறி அலைக்கழித்து வந்துள்ளார்.இவர் கூறிய நாட்களுக்குப் பிறகு சீட்டுக்கட்டியவர்கள் நேரில் சென்று பார்த்தபோது அலுவலகம் மூடி இருந்தது. மேலும் ஜே பி ஸ்டார் ஏஜென்சி கடைகளை அனைத்தையும் மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவானார்.இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து தலைமறைவான ஜோதியை தீவிரமாக தேடி கைது செய்தனர். மேலும் இந்த மோசடி வழக்கில் ஜோதி மனைவி சரண்யா தந்தை மதுரை (66) அவரது தம்பி பிரபாகர் ஆகிய நான்கு பேரையும்போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தாமரைப்பாக்கத்தில் இருந்த ஜே பி ஸ்டார் எண்டர்பிரைசஸ் கடைக்கு போலீஸார் சீல் வைத்தனர். இந்த மோசடி தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கைதான ஜே.பி.ஜோதியின் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது கிடங்கில் இருந்த பொருட்களை ஏலம் விடலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின்படி, மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் தாமரைப்பாக்கத்தில் உள்ள ஜே .பி. ஜோதி ஸ்டார் எண்டர்பிரைசஸ் கடையில் சுமார் 95 ஆயிரம் மதிப்புள்ளான மளிகைப் பொருட்கள் மற்றும் சோப்பு கிளீனிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விடும் நடவடிக்கையில் இருபத்தி ஐந்து சதவீதம் கழிவு போக மீதமுள்ள 72000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏலம் விடப்பட்டது.
இதனை ஜெயக்குமார் என்பவர் ஏலம் எடுத்தார். இந்த ஏலத்தின் போது திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu