பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக சார்பில்,   திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
X

பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்த, கொசவன்பாளையத்தில் நடந்த திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேசினார். 

பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கொசவன்பாளையம் ஊராட்சியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவருமான டி.தேசிங்கு தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், நகர செயலாளர்கள் தி.வே.முனுசாமி தி.வை.ரவி, ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, ஒன்றிய நிர்வாகிகள் இ.கந்தபாபு, ஜெ.சாக்ரடீஸ், ஜி.சுகுமார், ப.கந்தன், கட்டத்தொட்டி எம்.குணசேகரன், வெள்ளவேடு கே.கோபிநாத், இ.வி.பி.பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய துணைச் செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான சி.அண்ணாகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜி.சி.சி.கருணாநிதி, துணைத் தலைவர் லல்லி பாபு, ஜி.பி.பரணிதரன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில செயலாளரும், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி, பேச்சாளர் ஜெ.சாமுவேல் சங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாவட்ட அவைத் தலைவர் ம.ராஜி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர் மற்றும் வழக்கறிஞர் டி.மகா, டி.சகாயம், கே.சுப்பிரமணி, ஆர்.செந்தாமரை, ராஜேஷ், தே.அருண்குமார், எம்.விக்னேஸ்வரன், இ.அமுதன், உள்பட பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் எம்.ஏழுமலை நன்றி கூறினார்.

Next Story