/* */

நொளம்பூர்: கோவில் உண்டியலில் பணம் இல்லாததால் பிரகாரத்தில் வெங்கல சிலை கொள்ளை!

நொளம்பூர் அருகே கோவில் உண்டியலில் பணம் இல்லாததால் பிரகாரத்தில் இருந்த 31கிலோ எடையுள்ள வெங்கல சிலை திருட்டு.

HIGHLIGHTS

நொளம்பூர்: கோவில் உண்டியலில் பணம் இல்லாததால் பிரகாரத்தில் வெங்கல சிலை கொள்ளை!
X

சென்னை நொளம்பூர் அருகே கோவில் உண்டியலில் பணம் இல்லாததால் பிரகாரத்தில் இருந்த 31கிலோ எடையுள்ள வெங்கல சிலை திருடிச் சென்ற சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நொளம்பூர் பன்னீர் நகரில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில். இங்கு நாள் தோறும் அதிக பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கோவில் மூடப்பட்ட நிலையில் நள்ளிரவில் வந்த திருடன் ஒருவன் கோவிலின் பூட்டை உடைக்காமல் சுவற்றுக்கும் இரும்பு கேட்டுக்கும் இடையில் சென்று உண்டியலை திருட முயற்சி செய்துள்ளார். அதில் பணம் ஏதும் இல்லாததால் கோவிலின் பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த 20 கிலோ எடையுள்ள விநாயகர் சிலை மற்றும் 13கிலோ எடையுள்ள அம்மன் சிலை என 2 வெண்கல சிலைகளை உடைத்து திருடி சென்ற நிலையில், சிறிது தூரம் சென்ற திருடன் 20 கிலோ எடையுள்ள விநாயகர் சிலையை மட்டும் சாலையோரம் வீசிவிட்டு 13 கிலோ எடையுள்ள அம்மன் சிலையை மட்டும் திருடி சென்றுள்ளார்.

தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மன் சிலையை திருடிச் சென்றது அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் காவல் துறையின் ரோந்து வாகனம் வந்து சென்றதும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் திருடன் வந்து சென்ற காட்சிகள் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் நொளம்பூர் போலீசார் கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த 2 மாதத்திற்கு முன் அதே கோவிலில் உண்டியல் பணம் சுமார் 22ஆயிரம் ரூபாய் காணாமல் போன நிலையில் தற்போது 2 வெண்கல சிலைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 3 Aug 2021 10:41 AM GMT

Related News