செம்பரம்பாக்கம் அரசு பள்ளிக்கு ரூ 28 லட்சத்தில் புதிய கட்டடம்:எம்எல்ஏ அடிக்கல்

செம்பரம்பாக்கம் அரசு பள்ளிக்கு ரூ 28 லட்சத்தில் புதிய கட்டடம்:எம்எல்ஏ அடிக்கல்
X

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.

செம்பரம்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.

செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ராம்குமார், சீ.காந்திமதிநாதன், மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, ஒன்றிய கவுன்சிலர் பிரியா செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் அனைவரையும் வரவேற்றார்.

விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ- கிருஷ்ணசாமி தலைமை வகித்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். செம்பரம்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15 -ஆவது மத்திய நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பதற்காக புதிதா ஒரு டிராக்டர், 2 மின்கல இயங்கு வாகனங்களை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ இயக்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இதனையடுத்து பாப்பான்சத்திரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.28 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகளுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்யப்பட்டு ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ முதல் செங்கல் எடுத்து கொடுத்து கட்டுமான பணியை தூக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ரூ.10.19 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டிருந்த அங்கன்வாடி மைய கட்டடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் ஊராட்சி தலைவர் பா.வின்சென்ட், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.முத்தமிழ்ச் செல்வன், வி.குமார், ஒன்றிய நிர்வாகிகள் டி.அண்ணாமலை, ஏ.ஜனார்த்தனன், எம்.இளையான், ஆர்.பிரபாகரன், ஏ.ஆர்.பாஸ்கர், எஸ்.புகழேந்தி, வி.பி.பிரகாஷ், எம்.ராஜாராம், கிளை நிர்வாகிகள் சாரங்கன், குமார், ராமச்சந்திரன், ராஜாமணி, ராதாகிருஷ்ணன், விநாயகமூர்த்தி, ஸ்ரீதர், பாஸ்கர், முரளி, ஞானமூர்த்தி, மனோஜ், குமார், ராஜி, ஆறுமுகம், லோகநாதன், இலக்குவகுமார், விநாயகமூர்த்தி, சீனிவாசன், குப்புசாமி, கமல் மற்றும் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




Tags

Next Story
ai solutions for small business