தாமரைப்பாக்கத்தில் நீர் மோர் பந்தல்: அதிமுக முன்னாள் அமைச்சர் திறப்பு

தாமரைப்பாக்கத்தில் நீர் மோர் பந்தல்:  அதிமுக முன்னாள் அமைச்சர்  திறப்பு
X

பெரியபாளையம் அருகே திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில்  நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் துவக்கி வைத்தார்.

பொது மக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு, பாதாம் பால், ரோஸ் மில்க், குளிர்பானங்களை வழங்கினார்

பெரியபாளையம் அருகே திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கினார்.

திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் கூட்டச்சாலை பேருந்து நிறுத்தவும் அருகே எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர்,மோர்,பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எம். மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வெங்கல் லிங்கன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் திருவேங்கடம், ஒன்றிய துணைச் செயலாளர் கோடு வெளி எம். குழந்தைவேலு, ஒன்றிய பொருளாளர் சுரேந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் குருவாயல் தயாளன், தகவல் தொழில் நுட்ப அணி சேர்ந்த மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின், முன்னாள் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலின் ரிப்பன் வெட்டி பொது மக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு, பாதாம் பால், ரோஸ் மில்க், குளிர்பானங்களை வழங்கினார்.

இதில், செம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், துணைத் தலைவர் திருவேங்கடம், குருவாயல் ஒன்றிய கவுன்சிலர் தக்ஷனா மூர்த்தி, மனோகரன், தாமரைப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், பொன் பழனி, கிளைச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் உட்பட ஏராளமான பொதுமக்கள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.




Tags

Next Story
ai solutions for small business