பெரியபாளையம் அருகே நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு பேரணி

பெரியபாளையம் அருகே நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு பேரணி
X

பெரியபாளையம் அருகே வெங்கல் ஊராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே வெங்கல் ஊராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே வெங்கல் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பேரணியை எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட வெங்கல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நாம் ஒன்றிணைவோம்! பசுமையும்,தூய்மையும் நமதாக்குவோம்! என்ற அடிப்படையில் நம்ம ஊரு சூப்பரு என்ற விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியும், மற்றும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த பிரச்சாரம் நடைபெற்றது.வெங்கல் பஜார் வீதியில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து துவங்கிய இப்பேரணி பல்வேறு வீதிகளின் வழியாக சென்றது. இந்நிகழ்ச்சிக்கு, வெங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திராணிலிங்கன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எஸ்.கணபதி,வார்டு உறுப்பினர்கள் என்.மல்லீஸ்வரி, கே.காஞ்சனா,என்.தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் ஊராட்சி செயலர் ஜே.உமாபதி வரவேற்றார். இதில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி (கிராம ஊராட்சிகள்) விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றி கலந்து கொண்டனர்.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, கார்த்திக் ஆகியோர் குப்பைகளை எவ்வாறு? தரம் பிரித்து வாங்க வேண்டும் என்று விளக்கிக் கூறினர்.வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரதீப் மக்கும் குப்பை,மக்காத குப்பை,அபாயகரமான கழிவுகள் எவை? எவை? என்று பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும்,குடும்பத் தலைவிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்துக் கூற வேண்டும் என்று தூய்மை பணியாளர்களுக்கு விளக்கி கூறினார்.

இதன் பின்னர், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai automation in agriculture