நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான இளைஞர் உடல் மீட்பு

கொசஸ்தலை ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி மாயமான அருள்ராஜ் சடலம் மீட்கப்பட்டது.
Mystical Youth Body Recovery
பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது மாயமான இளைஞரின் உடல் இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி இவரது மகன் அருள்ராஜ் ( வயது 23) என்பவர் தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு பகுதியில் கடந்த 26ஆம் தேதி தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று அருள்ராஜ் திடீரென நீரில் மூழ்கி மாயமானதால் உடன் இருந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த தேர்வாய் சிப்காட் தீயணைப்பு துறை வீரர்கள் மாயமான இளைஞரின் உடலை இரண்டு நாட்களாக தேடி வந்த போதிலும் உடல் கிடைத்த பாடில்லை இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவரது உறவினர்கள் மாயமான இளைஞரின் உடலை மீட்டு தர கோரி நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அரக்கோணம் பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டு மாயமான இளைஞரின் உடலை தீவிரமாக தேடி வந்து நிலையில் நேற்று நள்ளிரவில் மாயமான அருள்ராஜ் உயிரிழந்த நிலையில் அவரது உடலை பேரிடர் மீட்பு குழுவினர் சடலமாக மீட்டனர்.பின்னர் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu