பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றின் கரையை ஆய்வு செய்த எம்பி சசிகாந்த் செந்தில்

பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றின் கரையை ஆய்வு செய்த எம்பி சசிகாந்த் செந்தில்
X

சசிகாந்த் செந்தில் எம்பி.

பூந்தமல்லி அருகே திருவேற்காட்டில் கூவம் ஆற்றுப்பகுதியில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சசிகாந்த் செந்தில் எம்பி செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதி திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும் நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாக கூறி அகற்றுவதற்காக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், முற்றுகை, சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருவள்ளுவர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இந்த குடியிருப்பு பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சசிகாந்த் செந்தில் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர்.அப்போது அவர்கள் கூறுகையில் கூவம் ஆற்றின் கரையோரம் ஒட்டியுள்ள இந்த பகுதி மேடான இடத்தில் அமைந்திருக்கிறதாகவும். இதற்குமுன் பல தடவை மழை வெள்ளத்தின் போதும் சிறிதளவு கூட இந்த பகுதி பாதிக்கப்படவில்லை.

திருவேற்காட்டின் பூர்வ குடிகளான நாங்கள் பரம்பரை பரம்பரையாக 200 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம்.இந்த ஊரின் பூர்வீக குடிமக்களான எங்களின் இந்த குடியிருப்புகளை அகற்றக்கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் தற்போது அதிகாரிகள் இந்த குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

3 தலைமுறைகளாக தாங்கள் இங்கு வசித்து வரும் நிலையில் இதுவரை இந்த குடியிருப்புகளுக்கு எந்தவித வெள்ள பாதிப்பும் ஏற்பட்டதில்லை. நீண்ட காலமாக குடியிருந்து வரும் எங்கள் குடியிருப்புகளை அகற்றக்கூடாது.வெள்ள பாதிப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள பகுதிகளில் உள்ள 30 வீடுகளை நாங்களே அகற்றித் தருகின்றோம். திருவேற்காடு கோயிலுக்கு சொந்தமான தீர்த்த கேணிக்கு பொதுப்பணித்துறை குறியீடு செய்துள்ளதிலிருந்து 100 அடி விட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.அதே அளவுக்கு எங்கள் குடியிருப்புகளுக்கும் அனுமதித்தால் போதும். கூவம் ஆற்றில் இருந்து சுமார் 30 அடி உயரத்தில் இந்த குடியிருப்பு அமைந்துள்ளது.

பூர்வீக குடிமக்களான எங்களின் குடியிருப்புகளை எடுப்பதற்கு அதிகாரிகள் ஏன் இவ்வளவு அக்கறை காட்டி வருகின்றனர் என்பது எங்களுக்கு தெரியவில்லை அப்படி எங்களின் வீடுகளை நிர்பந்தப்படுத்தி அகற்றினால் எங்கு செல்வது தெரியவில்லை. தங்களின் அன்றாட வாழ்வாதாரம் அருகாமையில் இருப்பதால் பசி,பட்டினி இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும், எங்களின் குழந்தைகளின் கல்வி கேள்வி கூறியாக மாறிவிடும் என்றும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

பொதுமக்கள் கூறிய கருத்துக்களை கேட்டுக் கொண்ட சசிகாந்த் செந்தில் எம்.பி.பின்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வெள்ள பாதிப்பு வந்தால் நாமே அதை எடுத்து விடலாம்‌ .ஆனால் அது போன்ற எந்த பாதிப்பும் இங்கு இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை தேவையில்லாமல் அனுப்புவது சரியில்லை‌. இந்த நிலம் எடுப்பு என்பது தேவையில்லாதது என தமிழக முதல்வரிடம் தெரிவிப்போம்.அதனை அரசு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களுக்கும் அரசின் சார்பில் வாக்குறுதியை அளிக்கிறேன். எல்லா வலியையும் தாங்கக்கூடிய மக்கள் தலித் மக்கள் தான். கூவம் நதியில் எல்லா இடத்தையும் விட இங்கு தான் பரப்பளவு அதிகமாக உள்ளது. அதனால் இந்த குடியிருப்புகளை அகற்றுவது தேவையில்லாதது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil