பள்ளி மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
வெங்கல் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி.
நாமக்கல் மாவட்டம் வெங்கல் அருகே எல்லாபுரம் மத்திய ஒன்றியம் வெங்கல் மற்றும் குருவாயல் ஆகிய கிராமங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பவானி , செந்தில் முருகன் தலைமை தாங்கினர்.
எல்லாபுரம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி , மாவட்ட துணை செயலாளர் வி.ஜெ.சீனிவாசன் , அவைத்தலைவர் முனுசாமி, டி.பாஸ்கர் , ஊராட்சி செயலாளர் நாகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திராணி லிங்கன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு வெங்கல் பள்ளியில் 208 மிதிவண்டிகளும், குருவாயல் பள்ளியில் 113 என மொத்தம் 339 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாணவர்கள் நல்ல முறையில் படித்து நமது நாட்டிற்கு, படித்த பள்ளிக்கு, பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு நல்ல பெயரை எடுத்து பெருமை சேர்க்க வேண்டும், படிப்புடன் விளையாட்டிலும் சாதிக்க வேண்டும், நம்மிடமிருந்து பறிபோகாத சொத்து கல்வி மட்டும் தான். அரசுப் பள்ளியில் படித்தவர்கள் தான் இன்று எத்தனையோ துறைகளில் சாதனையாளர்களாக உள்ளனர். எத்தனை கஷ்டம் வந்தாலும் கல்வியை கைவிடக்கூடாது,படித்து முடித்து உயர் கல்விக்கு சென்று நல்ல முறையில் படித்து அரசு துறையில் இருக்கின்ற பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளை எழுதி அவையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளியில் படிக்கின்ற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல சலுகைகளை அறிவித்து அவற்றை அனைத்தையும் செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம்1000, இலவச பேருந்து சேவை, தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசை மற்ற மாநிலங்களும் திரும்பி பார்க்கும் அளவிற்கு நம் முதல்வர் தாயுள்ளத்தோடு திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அனிதா ஸ்ரீபன் , திமுக ஒன்றிய நிர்வாகிகள் லோகநாதன், டேவிட், ரஜினி, நாராயணசாமி, சுப்பிரமணி, துணைத்தலைவர் சண்முகம், அண்ணாமலை,ஜெகன், ராஜேஷ், செல்வம், ஆரா சுரேஷ் , தமிழ் மூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.இறுதியில் துணை தலைமையாசிரியர் பரமானந்தம் நன்றி கூறினார்.
இதே போல் வெள்ளியூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ஆனந்தி தலைமை தாங்கினார்.திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணைத்தலைவர் பர்கத்துல்லா, மாவட்ட கவுன்சிலர் தென்னவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தசரதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி கலந்து கொண்டு 75 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.இறுதியில் உதவி தலைமையாசிரியர் ஜெபசெல்வின் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu