ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு எம்எல்ஏ அடிக்கல்
வரதராஜபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டுமான பணியை எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், வரதராஜபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி 1971 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக டாக்டர் கலைஞர் இருந்த போது ஆரம்ப பள்ளியாக கொண்டுவரப்பட்ட பள்ளியாகும்.
இந்நிலையில் இந்தப் பள்ளி கட்டிடம் மிகவும் பழுந்தடைந்து ஆங்காங்கு கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டும் சிமெண்ட் கான்கிரீட்டுகள் உதிர்ந்தும் ஆபத்தான நிலையில் இருந்ததாலும், இடநெருக்கடியாலும் மாணவர்கள் பெரிதும் அவதியுற்று வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் இந்த பள்ளிக்கு புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித் தரக்கோரி பூந்தமல்லி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிலிருந்து புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித் தருவதற்காக ரூ. 25 லட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்து தந்தார்.
இதனைத் தொடர்ந்து புதியதாக பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பொது பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.விஜய் ஆனந்த், ஒன்றிய திமுக செயலாளர் ப.ச.கமலேஷ், உதவி செயற்பொறியாளர் எஸ்.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ராம்குமார், சீ.காந்திமதிநாதன், பொது பணித்துறை உதவி பொறியாளர் ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் வி.குமார், மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, ஒன்றிய அவைத்தலைவர் டி.அண்ணாமலை, நிர்வாகிகள் ஏ.ஜனார்த்தனன், எம்.இளையான், எஸ்.புகழேந்தி, ஏ.ஆர்.பாஸ்கர், ஆர்.பிரபாகரன், வி.பி.பிரகாஷ், த.குமரேசன், ஒன்றிய கவுன்சிலர் உமாமகேஸ்வரி சங்கர், எம்.கே.பக்தவச்சலம், ஊராட்சி தலைவர்கள் கலையரசன், வே.தணிகாசலம், மற்றும் பொன்.முருகன், ஏ.சைமன், எஸ்.பாலமுருகன், எஸ்.செந்தில்குமார், எம்.கே.பி.பாபு, கேசவன், திருமலைராஜ், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu