/* */

வெங்கலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு பூமி பூஜை

பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையை பூந்தமல்லி எம் எல் ஏ கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

வெங்கலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு பூமி பூஜை
X

ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி, பூவிருந்தவல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை, மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 15 வது நிதி குழு சுகாதார மானியத்தின் படி சுமார் 1 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்,துணை சுகாதார மையம், மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார மையம்,உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்படுத்துவது கொண்டு வர அதிகாரிகளுக்கு அப்போது அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி,எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, சத்தியமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் சங்கீதா, வெங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன்,மாவட்ட பிரதிநிதி வெங்கல் பாஸ்கர்,காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சிவசங்கர், நிர்வாகிகள் ரஜினிகாந்த்,அப்பன், செம்பேடு செல்வம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், திமுக பிரமுகர்கள், பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Jan 2024 12:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!