எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

பூந்தமல்லி அருகே எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில். புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் வாணியச்சத்திரம் பகுதியில் மத்திய ஒன்றிய கழக செயலாளர் கோடு வெளி தங்கம் முரளி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை கழக வழக்கறிஞரும், பூந்தமல்லி தொகுதி மேற்பார்வையாளருமானப.கணேசன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஒன்றிய செயலாளர் தங்கம் முரளியிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.இந்த முகாமில் எல்லாபுரம் மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 ஊராட்சிகளில் இருந்து திரளான இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் வி.ஜே. சீனிவாசன், மாவட்ட பிரதிநிதிகள் தாமரைப்பாக்கம் பாஸ்கர், வழக்கறிஞர் அன்பு, பூந்தமல்லி நகர செயலாளர் திருமலை, ஒன்றிய நிர்வாகிகள் முனுசாமி, சுப்பிரமணி, நாகலிங்கம், உமா சீனிவாசன், லோகநாதன்,பாஸ்கர், ஸ்ரீதர்,நாராயணசாமி, சுப்பிரமணி, ஆளவந்தான், இளைஞர் அணி நிர்வாகி சரத்குமார், தகவல் தொழில்நுட்பு பிரிவு விஜயகுமார், செம்பேடு செல்வம், குருவாயல் ராஜேஷ், காரணி சத்யா, அச்சுதன், கண்ணன், வேலன், சிவப்பிரகாஷ் மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu