திரு.வி.க.வுக்கு விரைவில் மணிமண்டபம்: டி.ஆர்.பாலு பேட்டி
தமிழ் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனாரின் 141-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி போரூரை அடுத்த துண்டலம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள திரு உருவச் சிலைக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக பொருளாளர் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி, மதுரவாயல் எம்.எல்ஏ.காரம்பாக்கம் கணபதி,உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திரு.வி.க. வாழ்ந்த இல்லம் தற்போது நூலகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திரு.வி.க. சிலை மற்றும் அவரது திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான அரசியல் கட்சியினர், திமுக நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியதாவது:
திரு.வி.க.விற்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் கட்ட வேண்டும் என நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அந்த திட்டம் நிறைவேறி இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து கொள்கிறோம்.
நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் நிதி பற்றாக்குறை சரி செய்ய சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் ஆர்வலர்கள் அதற்கு நிதி உதவி செய்து விரைவில் மிகப் பெரிய மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்கு தமிழக அரசும், துறை சார்ந்த அதிகாரிகளும் உறுதுணையாக இருப்பார்கள்.
நாயக்கர், நாயுடு, முதலியார் என அன்றைய எதிர்க்கட்சிகள் கிண்டல் அடித்தனர். எந்தப் பிரச்சனை என்றாலும் அதில் ஒற்றுமையாக இருந்து போராடுவது வழக்கம். தொழிற்சங்க தலைவராக திரு.வி.க. இருந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மிகப்பெரிய போராட்டக்காரராக இருந்த திரு.வி.க. தமிழ்த் தென்றலாகவும் விளங்கினார்.
அடுத்த விழா நடக்கும்போது இங்கு மணிமண்டபம் அமைய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.தமிழ் அறிஞர்களும் அதனை விரும்புகிறார்கள்.
முருகர் தமிழ் கடவுள் என்பது தெரியும்.முருகனுக்காக எடுக்கப்பட்ட மாநாடு, தமிழ் மாநாடாகத்தான் எடுக்கப்பட்டது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை.
கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் கேட்பதற்கு பதில் சொல்ல திமுக தயார். அது இந்த நிகழ்ச்சி அல்ல என தெரிவித்தார்.இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu