பூந்தமல்லி அருகே 15 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்தவர் போக்சோவில் கைது

பூந்தமல்லி அருகே 15 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்தவர் போக்சோவில் கைது
X
பூந்தமல்லி அருகே 15 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 10 வகுப்பு படிக்கின்ற 15 வயது மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) என்ற இளைஞர் ஒருதலைப்பட்சமாக நீண்ட நாளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சதீஷ்குமார் பள்ளி மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவியன் பெற்றோர் அந்த வாலிபரை கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சதீஷ்குமார் மாணவியை வீட்டில் புகுந்து வலுக்கட்டாயமாக கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து கற்பழிக்க முயற்சித்துள்ளார். இதனால் மாணவி பயந்து அலறி யடித்து கூச்சலிட்டுள்ளார். மாணவியின் சத்தத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து வீட்டில் கட்டி அடைத்து வைத்தனர் இதுகுறித்து வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் வெள்ளவேடு போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

அதன்பிறகு சிறுமியின் உறவினர்கள் சதீஷ்குமாரின் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சதீஷ்குமாரின் உறவினர் காயமடைந்து பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சதீஷ்குமாரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய மாணவியின் உறவினர்கள் 11 பேர் மீது வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!