திருமழிசை குளிர்ந்த நாயகி ஸமேத ஒத்தாண்டேஸ்வரர் காேவில் மகா கும்பாபிஷேகம்

திருமழிசை குளிர்ந்த நாயகி ஸமேத ஒத்தாண்டேஸ்வரர் காேவில் மகா கும்பாபிஷேகம்
X

திருமழிசை குளிர்ந்த நாயகி ஸமேத ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில்.மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

திருமழிசை குளிர்ந்த நாயகி ஸமேத ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில்.மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருமழிசை குளிர்ந்த நாயகி ஸமேத ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில்.மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமைந்துள்ள ஸ்ரீசீதளாம்பிகா ஸமேத மனோனு கூலேஸ்வரர் எனும் குளிர்ந்த நாயகி ஸமேத ஸ்ரீ ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கரிகால பெருவளவன் சிவதரிசனத்தின் பொருட்டு யானையின் மீதமர்ந்து திருமழிசை என்னும் புவிசாரம் நிறைந்த மஹீசாரபுரம் சேஷரத்தில் வருங்கால் கரிகால பெருவளனை ஆட்கொள்ள வேண்டி யானையடி சிக்கிய ஊனாங் கொடியின் கழ் அரசனது உடைவாளால் வெட்டப்பட்டுத் தான்தோன்றியாய் வெளிப்பட்டவரும், தருமசேத்திரமான பாரதத்தின் கண் 64 சுயம்புலிங்க மூர்த்தங்களில் ஒன்றாகிய ஸ்ரீ குளிர்ந்தநாயகி என்ற சீதளாம்பிகையை இடப்பகம் கொண்ட ஒத்தாண்டேஸ்வரர் எனும் ஸ்ரீ மனோனுகூலேஸ்வரப் பெருமாள் அருளும் மூலாலயம் மற்றும் சுற்றுக் கோயில் விமானங்கள் வண்ணங்கள் பூசப்பட்டு மேலும் பல்வேறு திருப்பணிகள் நல்ல முறையில் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த ஜனவரி 27 ஆம் தேதி மங்கள இசை, கோ பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கின. இதைத் தொடர்ந்து 28 ஆம் தேதி குரு வந்தனமும், தீபாராதனையும் நடைபெற்றது. மேலும் 29 ஆம் தேதி மங்கள இசையுடன் தொடங்கி சித்தி வினாயக பூஜையும், 30 ஆம் தேதி அஷ்டமூர்த்தி ஹோமமும், 31 ஆம் தேதி குமார கணபதி பூஜையும் நடைபெற்றன.

மகா கும்பாபிஷேக விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன. இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கால பூஜை மாலை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளும் 11 கால பூஜைகள் நடைபெற்றது.

மகா கும்பாபிஷேக நாளான இன்று 7 ஆம் தேதி, அதிகாலை 5 மணிக்கு, 12 ஆம் கால பூஜைகள் துவங்கி, அங்குரார்ப்பணமும், சிவசூர்ய பூஜையும், இதனையடுத்து காலை 7:20 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும், கலசங்கள் புறப்பாடும், மூலலிங்க ஜீவன்யாசமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காலை 9:30 மணியளவில், ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், பிறகு 10:20 மணியளவில் பரிவாரங்கள் மற்றும் மூல லிங்க மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெற்றன.

வெகு விமர்சையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் திருமழிசை பூந்தமல்லி திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வெளியே நின்று ராஜ கோபுரத்தின் மீது உள்ள கலசங்கள் மீது புனித நீரை ஊற்றும் போது நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அதிக அளவில் கூடியதால் திருமழிசை பகுதியில் இருந்து திருவள்ளூர் செல்லும் முக்கிய சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் அதிகளவில் வந்த வண்ணம் இருந்ததால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!