மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் 76வது பிறந்த நாள்: நினைவிடத்தில் மனைவி, மகன் அஞ்சலி

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் 76வது பிறந்த நாள்: நினைவிடத்தில் மனைவி, மகன் அஞ்சலி
X

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அவரது மனைவி, மகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அவரது மனைவி, மகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மனைவி சாவித்திரி, மகன் சரண் ஆகியோர் மலர் வலையம் வைத்து நினைவஞ்சலி.

மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி அவர்களின் 76 ஆவது பிறந்த நாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் எஸ்பிபி யின் மனைவி சாவித்திரி மற்றும் அவரது மகன் சரன் ஆகியோர் அவரது திருவுருவ படத்தை ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 6 டன் எடையுள்ள சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து இன்று ஒரு நாள் ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் மேலும் அவரது நினைவிடத்தில் மணி மண்டபம் கட்டுவதற்கான பணிகளை அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எஸ்பிபி சரண் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!