பூந்தமல்லி அருகே ஸ்ரீராம பக்த ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்
பூந்தமல்லி அருகே புதுக்குப்பம் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Anjaneya Swamy Temple -திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், புதுக்குப்பம் கிராமத்தில் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் உள்ளது.கொசஸ்த்தலை ஆற்றங்கரையின் மேல் எருமைவெட்டிபாளையத்தில் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவில் உள்ளது.புது குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீராம பக்த ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் இருந்து இக்கோவிலுக்கு பல நூறு ஆண்டுகளாகதாய் வீட்டு சீதனம் செல்கின்றது.
இவ்வாறு புகழ்பெற்ற புதுக்குப்பம் கோவிலை கிராம பொதுமக்கள் புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.இதை முன்னிட்டு இக்கோவில் வளாகத்தில் சனிக்கிழமை முதல் சிறப்பு பூஜைகள்,சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது.நேற்று காலை மகா பூர்ணாகுதி நிறைவு பெற்றவுடன் வேங்கட கிருஷ்ணன் அர்ச்சகர் தலைமையில் புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு விமானம்,பக்த ஆஞ்சநேய சுவாமி,நவகிரக சன்னதி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு காலை 9 மணிக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.பின்னர்,கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதன் பின்னர்,சீதாராமர் திருக்கல்யாண வைபவமும், பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ராமர் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறுகின்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுக்குப்பம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu