குமணன்சாவடி: வாத்தியங்கள் முழங்க, பாடல் இசைக்க போலீசார் கொரோனா விழிப்புணர்வு
பேண்டு வாத்தியங்கள் முழங்க கொரோனா விழிப்புணர்வு
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களை போலீசார் ஒருபுறம் பறிமுதல் செய்து வந்தாலும், கொரோனா குறித்த விழிப்புணர்வை தீவிரமாக பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஊர்வலமாக நடந்து சென்று பேண்டு வாத்தியங்கள் இசைத்தும், விழிப்புணர்வு பாடல்கள் பொதுமக்களை கவரும் வகையில் பாடி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்து வைக்கின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை விழிப்புணர்வு பணியை செய்து வருவதாகவும் இன்றைய தினம் பூந்தமல்லி அடுத்த குமனன்சாவடி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் பேண்டு வாத்தியங்கள் இசைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu