சாலை மற்றும் கட்டிட பணியை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி

சாலை மற்றும் கட்டிட பணியை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி
X

பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.

எல்லாபுரம் அருகே சாலை மற்றும் கட்டிட பணியை எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.

எல்லாபுரம் ஒன்றியத்தில் ரூ.1.20கோடி மதிப்பீட்டில் சாலைகள்,பள்ளி கட்டிடங்கள் அமைக்கும் பணி ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் சாலை மேம்பாட்டு பணிகள், பள்ளி மேம்பாட்டு பணிகள், கட்டிட பணிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் ஆயிலச்சேரி,கன்னிகாபுரம், கோடுவள்ளி,மாகரல், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.1.20கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கன்னிகாபுரம்,கோடுவெளி,தாமரைப்பாக்கம் ஆகிய 3 ஊராட்சிகளில் புதிய தார் சாலை அமைக்கப்பட உள்ளது.மேலும், தாமரைபாக்கம்,மாகரல் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்கவும்,ஆயிலச்சேரிஊராட்சியில் நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி தலைமையில் நடைபெற்றது. இதில்,ஆ. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், ஸ்டாலின்,திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் வெங்கல் வி.ஜே.சீனிவாசன்,முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கோடுவெளி எம்.குமார், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி முனுசாமி நிர்வாகிகள் ஆயிலச்சேரி ரகு,சுப்பிரமணி,நாகலிங்கம்,உமா சீனிவாசன்,லோகநாதன், வெங்கல் ஜி.பாஸ்கர்,வக்கீல் அன்பு,சரத்குமார்,ஸ்ரீதர், நாராயணசாமி,சுப்பிரமணி, ஆளவந்தான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி பள்ளி குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என சமையல் கூடங்களுக்கு நேரில் சென்று உணவை சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story