பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி
X

எல்லாபுரம் அருகே பள்ளி மாணவ மாணவிகளுக்கு கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சைக்கிள் வழங்கினார்.

MLA News -எல்லாபுரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி.

MLA News -திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த வெங்கல் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆவடி மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசுவாமி கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் 192 மாணவி மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் எல்லாபுரம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்கம் முரளி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வி.ஜே. சீனிவாசன், மாவட்ட பிரதிநிதிகள், டீ.பாஸ்கர், ஜி.பாஸ்கர், வழக்கறிஞர் கே.ஜி.அன்பு, ஒன்றிய துணைச் செயலாளர் நாகலிங்கம், மற்றும் நிர்வாகிகள் பி.ஜி. முனுசாமி, உமா சீனிவாசன், லோகநாதன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் டேவிட், ரஜினி, நிர்வாகிகள் ராஜேஷ், ஜெகநாதன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முன்னதாக அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கிரிஷ்பால் வரவேற்றார்.முடிவில் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் பரமானந்தம் நன்றி கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story