கருணாநிதி பிறந்தநாள்: 1000 முன்களப் பணியாளர்களுக்கு அமைச்சர் நாசர் விருந்து!

கருணாநிதி பிறந்தநாள்: 1000 முன்களப் பணியாளர்களுக்கு அமைச்சர் நாசர் விருந்து!
X

முன் களப்பணியாளர்களுக்கு அமைச்சர் நாசர் விருந்து பரிமாறிய காட்சி.

பூவிருந்தவல்லியில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு 1000 முன்களப் பணியாளர்களுக்கு முட்டையுடன் கூடிய கோழிக்கறி பிரியாணியை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98 பிறந்த நாள் விழா பூவிருந்தவல்லியில் வெகுவிமரிசையாக கொண்டப்பட்டது.

திமுக நகரச் செயலாளர் ரவிகுமார் ஏற்பாட்டில் தமிழக பாள்வலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு பூவிருந்தவல்லி நகராட்சியில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், சுகாதரத்துறையினர் என 1000 பேருக்கு முட்டை, சிக்கன் 65 கூடிய கோழிக்கறி பிரியாணியை பரிமாறினார்.

இதில் எம்.எல்.ஏ கிருஷ்ணாசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!