பட்டப்பகலில் வீட்டில் 6 சவரன் நகை கொள்ளை

பட்டப்பகலில் வீட்டில் 6 சவரன் நகை கொள்ளை
X

மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மதுரவாயல் கங்கை அம்மன் நகர் 8வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (43) பெயிண்டர். இவரது மனைவி தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சுரேஷூம் அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 6 சவரன் நகை, ரூ. 25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் புகாரின் அடிப்படையில் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா