பாரிவாக்கத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த எம்எல்ஏ.,ஜெகன் மூர்த்தி

பாரிவாக்கத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த எம்எல்ஏ.,ஜெகன் மூர்த்தி
X

பாரிவாக்கத்தில் அம்பேத்கர் சிலை புதுப்பிக்கப்பட்டு இன்று திறந்துவைத்த எம்எல்ஏ., ஜெகன் மூர்த்தி.

பாரிவாக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் திருவுருவச் சிலையை எம்எல்ஏ., ஜெகன் மூர்த்தி திறந்து வைத்தார்.

புரட்சி பாரதம் கட்சி திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூவிருந்தவல்லி வடக்கு ஒன்றியம் பாரிவாக்கம் கிளையின் சார்பாக பாரிவாக்கத்தில் அம்பேத்கர் உருவச்சிலை புதுப்பிக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சட்டமன்ற உறுப்பினரும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான ஜெகன் மூர்த்தி கலந்துகொண்டு புரட்சி பாரதம் கொடியினை ஏற்றி வைத்து அம்பேத்கர் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பூவிருந்தவல்லியில் வடக்கு ஒன்றிய தலைவர், பூவிருந்தவல்லி வடக்கு ஒன்றிய செயலாளர், பொருளாளர் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!