'தடுப்பூசிபோட்டுக்கொள்ளுங்கள்' இருகரம் கூப்பி வேண்டிய பூந்தமல்லி எம்எல்ஏ

தடுப்பூசிபோட்டுக்கொள்ளுங்கள் இருகரம் கூப்பி வேண்டிய பூந்தமல்லி எம்எல்ஏ
X

கொரோனா தடுப்பூசி போடும்படி மக்களிடைம், இருகரம் கூப்பி வணங்கி பூந்தமல்ல எம்எல்ஏ வலியுறுத்திய காட்சி.

கொரோனாவை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என இரு கரம் கூப்பி பூந்தமல்லி எம்எல்ஏ மக்களிடம் வவியுறுத்தினார்.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தனியார் திருமண மண்டபங்களை மருத்துவ படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி உள்ள தனியார் மண்டபத்தில் 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதனை பூந்தமல்லி திமுக எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு ஆய்வு மேற்கொண்ட அவர், கொரோனா தடுப்பூசி போட வந்தவர்களை இருகரம் கூப்பி, கொரோனாவை தடுக்க தடுப்பு மருந்து இல்லை, தயவுசெய்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என வலியுறுத்தினார்.

பின்னர், பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எது போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு வந்து செல்ல மருத்துவமனை ஏதுவாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

#instanews #tamilnadu #Poondamallee #vaccination #mla #Corana #people #நகராட்சி #Municipality #vaccine #government #hospital

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது