வெங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை: இருவர் கைது

வெங்கல் பகுதியில்  கஞ்சா விற்பனை:  இருவர் கைது
X
சுரேஷ் பாபு
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், வெங்கல் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வீட்டில், வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலிசார் தீவிர சோதனை நடத்தினர் .

அப்போது, வீட்டில் 1கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்பாபு (39) என்பவரையும், அவரது கூட்டாளி வெங்கல் அருகே உள்ள பாகல்மேடு பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (48) ஆகிய 2 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, இவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இருவரும் திருவள்ளூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!