ஓசி பிரியாணி தராததால் ஆவேசம்: ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் கைது

ஓசி பிரியாணி தராததால் ஆவேசம்:  ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் கைது
X
திருவள்ளூர் அடுத்த திருமழிசையில், ஓசியில் பிரியாணி தராததால் ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த திருமழிசை மெயின் ரோட்டில், அருணாச்சல பாண்டியன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 18ஆம் தேதி, இவரது ஓட்டலுக்கு, இருசக்கர வாகனத்தில் வந்த சிலர், ஓசியில் பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், அன்று மாலை மீண்டும் கும்பலாக வந்த அவர்கள், ஓட்டல் மற்றும் அருகே இருந்த வீட்டின் மீது, பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து, வெள்ளவேடு காவல் நிலையத்தில், அருணாச்சல பாண்டியன் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறுமாறு எபினேசர் என்பவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெட்ரோல் குண்டுகளை வீசிய 7 பேரை நேற்று கைது செய்தனர். ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த எபினேசரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!